
பல நாட்களுக்குப் பின்னர் நேற்று 1ஆம் திகதி ஹட்டனில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு இருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் ஹட்டன் டன்பார் பகுதியில் உள்ள லிட்ரோ காஸ் விநியோகஸ்தரின் வாடிக்கையாளர்கள், எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்காக டோக்கன் வழங்குவதற்கு 400 ரூபா கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த வாடிக்கையாளர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து டோக்கன் வழங்கிய விநியோக ஊழியரிடம் விசாரித்தபோது, டோக்கன் வழங்குவதற்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை என்று கூறினார்.
வீட்டு எரிவாயு சிலிண்டரைப் பெற வந்த பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என்றும், விநியோகஸ்தர் தங்களுக்கு லிட்ரோ எரிவாயு சிலிண்டரை வழங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.