
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி ஆபத்தான நிலையில் காணப்படுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.