
கொழும்பு, ஏப் 02
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. ஆனால் அவற்றுக்கான எரிபொருளைப் பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்கச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில வங்கி நடவடிக்கைகளே இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். இரவில் வங்கிகள் மூடப்பட்டு ஏடிஎம்கள் செயற்பட வேண்டும் என்றாலும், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.
இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது இயந்திரங்கள் பழுதடையும் என அவர் தெரிவித்தார்.