
மின்வெட்டு இன்று எட்டு மணித்தியாலம் 30 நிமிடங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக நாட்டில் 12 மணித்தியாலத்துக்கும் அதிகமான அளவு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று மின்வெட்டின் நேரஅளவு குறைக்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் மின்வெட்டின் கால அளவு இன்னும் குறுக்கப்படும் என்றும் துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.