திருகோணமலை நகர் பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் பற்று சீட்டு ஒன்றிற்கு பணம் செலுத்த மஹிந்தவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பணத்தை வழங்கிய போது அப்பணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தூர இடத்தில் இருந்து வருகை தந்து தமது சேவையை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போதும் குறித்த அதிகாரி பணத்தை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
இதேவேளை திருகோணமலையிலுள்ள வங்கியொன்றிற்கு குறித்த அலுவலக உத்தியோகத்தர் தொலைபேசி மூலம் தொடர்பு ஏற்படுத்திய போதும் குறித்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வங்கிக்கு அந்த நபரை அனுப்புமாறும் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் 2009/03/20 ஆம் திகதியன்று அச்சிடப்பட்ட இந்த ஆயிரம் ரூபாய் காசை மாற்றுவதற்காக பல கடைகளுக்கு சென்ற போதும் கடை உரிமையாளர்கள் எவரும் மஹிந்தவின் படம் இருப்பதினால் பணத்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
