
கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதை அடுத்து அதன் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு இலங்கை மின்சார சபை ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த மின் உற்பத்தி நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்திற்கு இன்றும், நாளையும் 12 மெட்ரிக் டன் மற்றும் எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளில் 10 மெட்ரிக் டன் அளவில் டீசல் வழங்கப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய்யும் விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக 270 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.