
சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடக செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியை பெறுவதற்கு இடமளிக்குமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.