
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் 2023 ஆம் ஆண்டு முற்பகுதியிலும் நடத்தப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 139 நாட்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மேலதிக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.