பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு – பொருட்களைக் கொள்வனவு செய்ய அலைமோதும் மக்கள்!

இலங்கையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும் கடைகளிலும் பெருமளவான மக்கள் வருகைதருவதைக் காணக்கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பின் பல பகுதிகளிலும் இவ்வாறு மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *