
மக்கள் தமது உரிமைகளை ஆர்ப்பாட்டம் செய்வது அவசரமானது அல்ல, எனினும் அவசரநிலையே அவர்களை வீதிக்கு கொண்டுவரும் என இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் அவசரநிலை நிலவினாலும் அதற்கான காரணத்தையும் விளைவையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குடிமகனின் உரிமை.
அது ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதியாகும்- என்றார்.
இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலாத்காரத்தைப் பிரயோகிப்பது மற்றும் அண்மையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டங்கள் தொடர்பில் கவலை கொண்டுள்ளார்.