
கொழும்பு, ஏப் 2
சனிக்கிழமை நாளுக்கான ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தபால் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய ரயில் சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.