
மேல் மாகாணத்தில் இன்று முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன.
உயர்நீதிமன்ற வளாகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுயாதீனமான சட்ட மாணவர் இயக்கம் சார்பில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.