ஊடரங்கு காலப்பகுதியிலும் தொடரும் மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு!

நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணிமுதல் நண்பகல் 5.30 மணிவரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அத்துடன், P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

தற்போதுள்ள இடர் நிலையின் காரணமாக இன்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை வரை அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *