பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடுமென அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு நாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும், கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படும் நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு 6 யோகட்டுகளை கொள்வனவு செய்யுமாறு சில வர்த்தகர்கள் நிர்ப்பந்திப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பால்மா பக்கட்டின் விலையினை காட்டிலும் 6 யோகட் கோப்பைகளின் விலை அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.