
மிரிஹான போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 26 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் உத்தரவுக்கமைய குறித்த 26 பேரையும் அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தும் வரையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.