
உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை ஒரு மாதங்களை கடந்த நிலையில் தொடர்கின்றது.
இந்நிலையில் ரஷ்ய படைகளால் உக்ரைனின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக தலைநகரான கீவ்வை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருவதுடன் அண்மையில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட தலைநகர் கெய்வில் இருந்து கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள நகரத்தை மீண்டும் அதிரடி நடவடிக்கை மூலமாக மீட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ப்ரோவரியின் மேயர் ஒரு தொலைக்காட்சி உரையில் குறிப்பிடும் போது
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது நடைமுறையில் புரோவரி மாவட்டம் முழுவதையும் விட்டுவிட்டதாகவும் உக்ரேனியப் படைகள் இப்போது எஞ்சியுள்ள ரஷ்ய வீரர்களையும், இராணுவ வன்பொருள் மற்றும் கண்ணிவெடிகளையும் அகற்றி வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.