
கொழும்பு, ஏப்
நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையால் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு சனிக்கிழமை மாலை கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனிக்கிழமை மாலை 06 மணி முதல் திங்கட்கிழமை காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது.
மிக மிக அத்தியாவசியமான தேவைகள் மற்றும் இதர அத்தியாவசியமான விடயங்களை பொறுத்தவரையில் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அதன் ஊடாகக் கிடைக்கின்ற அறிவித்தலின் படி செயற்படலாம்.
இது தொடர்பாக மேலதிக தகவல்களை உரிய அறிவித்தல்கள் எங்களுக்கு முறையாக கிடைத்த பிற்பாடு பொதுமக்களுக்கு தெரிவிப்போம். அதுவரை பொதுமக்கள் மிகவும் அமைதி காத்து ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து நடக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.