
கொழும்பு, ஏப்2
இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டார்.
இலங்கை ரக்பி சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கும் ஏனைய விடயங்களை நிர்வகிப்பதற்கும் உரிய வாக்கெடுப்பினை நடத்துவதற்கு உரிய அதிகாரியாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.