இலங்கையில் அவசரகால நிலை குறித்து கவலை கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இலங்கையில் அவசரகால நிலை குறித்து கவலை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்து வேறுபாடு உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளை கடுமையாக வலியுறுத்துகிறது. இலங்கை மக்களுக்கு சவாலான காலங்கள் – ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என அதில் குறிப்பிட்டுள்ளது.
