
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரருமான ஜகத் சமந்தவை கைது செய்ய விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.
சிலாபம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த நபரை கைது செய்ய இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.