
மூதூர் மத்திய கல்லூரி மைதானத்திற்கு இன்று சனிக்கிழமை சமையல் எரிவாயு பெறுவதற்காக வந்த மக்கள் எரிவாயு பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்றைய தினம் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் வைத்து சமையல் எரிவாயு வழங்கப்படவுள்ளதாக போலித் தகவலொன்று வெளியானதையடுத்து அதிகாலை முதல் சமையல் எரிவாயு பெறுவதற்காக உச்சி வெயிலில் கார்த்திருந்த பொதுமக்கள் சமையல் எரிவாயு வராதென தகவல் கிடைத்ததையடுத்து மதிய வேளையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சிறிது நேரம் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்திற்கு முன்னாள் உள்ள திருகோணமலை – மட்டக்களப்பு வீதியை மறித்து மக்கள் குழுமி இருந்தமையால் சுமார் 15 நிமிடங்கள் இவ் வீதி ஊடான போக்குவரத்துக்கு தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்டோர் வருகைதந்து பொதுமக்களுடன் பேசி பிரச்சினையை சுமூக நிலைக்கு கொண்டு வந்தனர்.