கொழும்பு, ஏப் 2
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை – 2021(2022) இன் 2022.04.03 ஆம் திகதிக்குரிய செய்முறைப் பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாட்டியம்(தேசியம்,பரதம்), கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேலைத்தேய சங்கீதம் ஆகிய செய்முறைப்பரீட்சைகள் நடைபெற மாட்டாது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
