
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் சற்றுமுன்பு முடக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணியளவில் முகநூல் , வட்ஸ் அப் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் , நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அந்நிலையிலையே இன்று சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இன்றைய தினமும் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது