இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டதனால் சமூக வலைத்தள பாவனையாளர்கள் அவரை பல கேள்விக்கணைகள் கொண்டு தாக்கி வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன.அந்த நிலையில் சுமார் 1.58 மணியளவில் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அவருடை பதிவை பார்த்த சமூக வலைத்தள பாவனையாளர்கள், அமைச்சரே நீங்கள் வெளிநாட்டிலா இருக்கிறீர்கள்? நீங்கள் VPN பயன்டுத்துகிறீர்களா? சுவிஸ் நாட்டில் இருந்தா பதிவிடுகிறீர்கள்? என பல கேள்விக்கணைகளை கொண்டு துவைத்து எடுத்துள்ளார்கள்
