பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட சமூகசெயற்பாட்டாளர் திசர அனுருத்த பண்டார பிணையில்விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை, எத்கலபகுதியில் வைத்து முட்டுவால் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காகதெரிவித்து குறித்த 28 வயதுடைய இளம் சமூக செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் சார்பாக சுமார 50 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.