கொழும்பு, ஏப் 2
நாடு பூராகவும் ஞாயிற்றுக்கிழமை 6 மணி முதல் திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்குச் சட்டத்தையும் மீறி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியின் பின்னர் மக்கள் வீதிக்கு இரங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
யக்கல பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பஸ்ஸூக்காக காத்திருந்த பயணிகள், அந்த பிரதேசத்தைச் சேரந்தவர்கள் மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
