சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை! – ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவசரகாலசட்டம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில், சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சட்டத்தரணி லால்விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளவேளை சமூக ஊடகங்களை முடக்கும் சட்டம் எதுவும் நாட்டில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *