இலங்கையில் உள்ள கனேடியர்களுக்கு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ருவிட்டர் பக்கத்தினூடாக விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
இலங்கையில் உள்ள கனடியர்கள்,கொழும்பு மற்றும் பிற பிராந்திய மையங்களில் இன்று பெரிய போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை நினைவூட்டுகிறோம். போக்குவரத்து சோதனைச் சாவடிகள்,சாலை மூடல்கள் எச்சரிக்கையின்றி நிகழலாம். அதற்கேற்ப திட்டமிடுங்கள், நெரிசலான பகுதிகளைத் தவிர்த்து, உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
