கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகிறது: சுகாதாரத்துறை

கொழும்பு, ஏப் 3

இலங்கையில் ஜூலை மாதமளவில் பெருந்தொகையான கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, அதற்கு முன்னதாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றிக்கொண்டுள்ளனர். இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 75 வீதமாக காணப்படுகின்றது.

எனினும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 55 வீதமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 200 என்றளவில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளல் மற்றம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதல் ஆகிய காரணிகளினால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையை குறைந்தளவில் பேண முடிந்தது.

பண்டிகைக் காலத்திலும் இந்த நிலைமையை கடைப்பிடித்தால் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை வரையறுக்க முடியும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *