
மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது. பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது.
மேலும், அண்மையில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.