
அரசு தரப்பில் இருந்து பல தவறுகள் நடந்துள்ளது உண்மைதான். இப்போது அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது என கோப் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் எம்.பி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் டுவிட்டரில் தெரிவித்தது,
இந்த நெருக்கடியான நேரத்தில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
நடக்கும் பல குளறுபடிகளுக்கு அரசு என்ற முறையில் நாமே பொறுப்பேற்கும் போது, அதிகாரிகள் முற்போக்காகச் சிந்திக்க வேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்க நகைச்சுவையாகும்.- என அவர் தெரிவித்துள்ளார்.