சமூக ஊடகங்கள் முடக்கம் – நாமலின் டுவிட்டுக்கு “ உங்கள் அங்கிளுக்கு சொல்லுமாறு” டிலித் ஜயவீர பதில்

நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பயனர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நாமல் ராஜபக்ஷ வி.பி.என். பயன்படுத்தி தற்போதை சமூக ஊடகங்களின் முடக்க நிலை குறித்து டுவிட்டரில் பதிவொன்றை செய்துள்ளார்.

”சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வி.பி.என். வசதி உள்ளது. அதனையே நான் தற்போது பயன்படுத்துகின்றேன். ஏனெனில் இந்த முடக்கம் பயனற்றது. உரியவர்கள் இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து பயனுள்ள முடிவுகளை எடுக்குமாறு வலியுறுத்துகின்றேன்.” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலிட்டுள்ள டிலித் ஜயவீர

“நீங்கள் டிஜிட்டல் அமைச்சர் தானே? இதை உங்கள் அங்கிளுக்கு சொல்ல முடியாதா? என்று கேள்வி கேட்டு பதிலிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலிட்டுள்ள அமைச்சர் நாமல்,

“நான் ஏற்கனவே எனது கருத்தை தெரிவித்துள்ளேன். எவ்வாறு இருந்தாலும் நீங்களும் எனது அங்கிளின் சிறந்த நண்பரல்லவா நீங்களும் செல்லலாம் ” என டிலித் ஜயவீரவின் கேள்விக்கு பதிலிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *