
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும்போது, பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றி வைத்திருப்பவர்கள் ஒளிந்துகொள்வதற்கு இடத்தை தேடிக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கொழும்பு குறுந்துவத்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனாநாயக உரிமையை முடக்குவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.