
நாம் எந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்போவதில்லை. மக்கள் ஆணையை எவராலும் முடக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாம் எந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்போவதில்லை. சுதந்திர சதுக்கத்துக்கு செல்லவே முயல்கின்றோம். நாங்கள் மக்களை அணித்திரட்டிக்கொண்டு வரவில்லை. நாங்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள். மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். மக்கள் ஆணையை எவராலும் முடக்க முடியாது. எனவே சுதந்திர சதுக்கத்துக்கு செல்வதற்கான அனுமதியை எமக்கு தாருங்கள்.
கொழும்பு குறுந்துவத்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் மக்களின் துயரை தெரிவிப்பதற்காகவே செல்கின்றோம். இன்று நாட்டில் சமையல் எரிவாயு இல்லை. மண்ணெண்ணெய் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.