நாட்டின் தலைவர் மடையனாக இருந்தால் நாம் என்ன செய்வது! – ஜே .வி.பி சீற்றம்

மக்களின் பிரச்சினைகளையும், நாட்டையும் விற்றுப் பிழைக்கு ராஜபக்சாக்கள் இத்துடன் அடங்க வேண்டும், இல்லையேல் மக்கள் போராட்டம் வீரியம் அடையும் என ஜே .வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள ஜே.வி.பியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு பயந்து விட்டது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாடு முழுவதும் வெடித்துள்ளது. அதற்கு நாமும் எந்த நேரத்திலும் ஆதரவு கொடுப்போம். அரசு உட்பட அனைத்து தரப்பினரும் பயந்துவிட்டனர்.

ஆகவே தான் பொலிசாரை வரவழைத்து எம்மை கட்டுப்படுத்த முயல்கின்றனர். இங்கு ஊடக சந்திப்பு நடைபெறும் வேளையிலும் கூட எமது அலுவலகத்தை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.அதற்கு எல்லாம் நாம் அஞ்ச மாட்டோம்.

நாட்டின் ஜனாதிபதி மக்களும் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். மக்களின் வீட்டில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு தங்கள் இல்லங்களில் மின்சாரத்துடன் வசதியாக இருக்கின்றனர். மடையர்கள் போல செயற்படுகின்றனர். நாட்டையும் விற்று மக்களையும் விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள், பல ஆண்டுகளுக்கும் தமக்கு மக்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் அது நடைபெறாது. மக்கள் விழித்து விட்டனர். அதனை உணர்ந்த கோட்டபாய தான், காட்டு மிராண்டித்தனமாக இப்போது செயற்பட ஆரம்பித்துவிட்டனர்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *