
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளது.
இணைய ஊடுருவிகள் மூலம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அல்லது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இதுவரையில் உத்தியோகபூர்வமாக இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது, இது செயற்கையாக ஏற்பட்ட ஒன்று என தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.