
கடன்பத்திரம் விநியோகிக்காத காரணத்தால் 5500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. – லாப் நிறுவனம்
5500 மெற்றிக்தொன் எரிவாயு உள்ளடங்கிய கப்பலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு கடன்பத்திரத்தை விநியோகிக்காத காரணத்தால் நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எரிவாயு கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
குறித்த எரிவாயு கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ள காரணத்தால் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் பாவனையாளர்களுக்கு லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க முடியாத நெருக்கடி நிலைமை ஏற்படும் என லாப் நிறுவனத்தின் தலைவர் டப்ள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் கொள்முதல் செய்துள்ள 3800 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.