நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஊரடங்கு அமுலில் உள்ள தற்போதைய நேரத்திலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் மஹரகமவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கிற்றார் மற்றும் தாள வாத்தியங்கள் சகிதம் ஆடல் பாடலுடன் போராட்டம் இடம்பெற்றது.
அவசர சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் திரும்பப் பெறு, மிரிஹான மீதான கொடூர தாக்குதலை கண்டிப்போம், கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் விடுதலை செய், மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டப் பேரணி இடம்பெற்றது.

