நாடளாவிய ரீதியில் இன்றையதினம் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் கருப்பு கொடிகளைப் பறக்க விட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
திருகோணமலை நகரை அண்டிய பிரதான வீதிகளில் இன்று இவ்வாறு கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
நேற்றையதினம் சமூக வலைத்தளங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இன்றையதினம் கருப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு செய்திகள் பரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்றையதினம் திருகோணமலை நகரின் வீதிகள் எங்கும் இவ்வாறு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
