ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரி வௌ்ளைநிற ஆடைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்   ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரி அமைதியான முறையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) வௌ்ளைநிற ஆடைகளை அணிந்து ஒன்று திரண்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரி அமைதியான முறையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு போட்டப்படிருந்த வீதித்தடையையும் மீறி காரியாலயத்திலிருந்து வெளியேறியவர்கள் சுதந்திர மாவத்தை வரையிலும் பேரணியாக சென்றனர்.

இவ்வாறு வீதித்தடையையும் மீறி செல்வதற்கு முயன்றபோது அங்கு பதற்றமான நிலைமையொன்று எற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு எரிபொருள் இல்லை, பெட்ரோல் இல்லை, எாிவாயு இல்லை, எங்களுக்கு யார் சாப்பாடு கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் இவ்விடத்திலேயே நிக்கின்றோம். இருக்கும் இடத்தில் எங்களை இருக்கவிடுங்கள், உங்களுக்கு பொலிஸ் நிலையம் இருக்கிறது. எங்களுக்கு என்ன இருக்கிறது. வீட்டுக்குச் செல்லமுடியாது, பிள்ளைகள் பட்டினியில் வாடுகின்றனர். சாப்பாடு யார் கொண்டுவந்து தருவார்கள், நீங்கள் தருவீர்களா எனத் தொிவித்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *