
அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக மக்கள் இடையில் பாரிய எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் இவர்கள் இவ்வாறு வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேவேளை, இரு தினங்களிற்கு முன்னர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.