
தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் கைத்தொழில்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக CPC இன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்கனவே பல தொழிற்சாலைகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய தேவை உள்ள தொழிலதிபர்கள் CPC யில் மேலும் பதிவு செய்யலாம்.
இதற்கிடையில், 37,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்தியக் கடன் கோட்டின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் நாளை திங்கட்கிழமை (4) இலங்கைக்கு வரவுள்ளது.
அத்துடன், நேற்று நாட்டை வந்தடைந்த 40,000 MT டீசல் இன்றைய தினம் விநியோகிக்கப்படும் என்று மேலும் அவர் கூறினார்