
நாங்கள் ஒரு போதும் வன்முறைக்கு அடிபணிய மாட்டோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மிகவும் ஜனநாயகமிக்கவர். அவர் அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாதவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை உள்ளது.இங்கு அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
வன்முறை கலந்து இருந்ததாலே அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவை அமைச்சர்கள் என்ற வகையில் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்.
நாங்கள் அமைதியான போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் வன்முறைகளை அனுமதிக்க முடியாது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்