ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அவசர சந்திப்பு? இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசப்படலாம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பிலான யோசனையை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுடன், வாசுதேவ நாணயக்கார மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *