
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் ஒரு வாரத்திற்குள் காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறும் இல்லாவிட்டால் கட்சியின் பதினான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் செயற்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதில் குறிப்பிட்டுள்ளது.