
கொழும்பு ராஜகிரிய பகுதியில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ள விஜேராம சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பிரதேசவாசிகளுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்காக இலங்கை முப்படை மற்றும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளது.