
நாட்டில் தற்போது நிலவும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாடு தொடர்பில் அறிவித்துளள்ளதுடன் காபந்து அரசாங்கத்தை அமைக்க ஒருவார கால அவகாசமும் வழங்கியுள்ளது.
இவ்வாறான பரபரப்புக்களுடன் அடுத்த தீர்மானம் ஒன்றினை எடுக்கும் பொருட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடம் இன்று (03) இரவு கூடவுள்ளதுடன் இதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.