
இலங்கையில் கருத்து சுதந்திரம், அமைதியான வகையில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கவேண்டும் என இலங்கையிடம் ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் இணங்காமலிருப்பதற்குமான உரிமை ஆகியன மக்களின் அடிப்படை உரிமைகள். அவை மக்களிற்கும் நாட்டிற்குமான உரையாடல்களிற்கு இடமளிக்கின்றன. இந்த உரிமையை பாதுகாக்கவேண்டும்.
அரசமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை பயன்படுத்துபவர்களிற்கும் வன்முறைகளை ஏற்படுத்துபவர்களிற்கும் இடையிலான வித்தியாசங்களை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகெங்கிலும் நாங்கள் செய்வது போல இலங்கையில் கருத்து சுதந்திரம் அமைதியான வகையில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுக்கின்றது.