ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகுவதே ஒரே தீர்வு-இம்ரான்.

ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகுவதே ஒரே தீர்வு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும்போது,

நாட்டில் யுத்தம் இல்லை, பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை, கொவிட் இல்லை.ஆனால் இன்று ஒரு குடும்பத்தை பாதுகாக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியும் பிரதமரும் அவரின் குடும்பத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக நாட்டு மக்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துகின்றனர்.

நாட்டை காக்க வந்த வீரராக தன்னை அடையாளப்படுத்திய ஜனாதிபதி இன்று சமூக வலைதளத்தை கண்டு பயந்துவிட்டார்.கொவிட் தொற்றின் போது நாட்டை மூடி மக்களை பாதுகாக்குமாறு நாம் எவ்வளவோ கேட்டுக்கொண்ட போதும் நாட்டை முடக்காமல் முட்டியை உடைத்தவர்கள் தமது குடும்பம் என்று வந்தவுடன் நாட்டை முடக்கியுள்ளனர்.

தேசிய அரசாங்கமோ அமைச்சரவை மாற்றமோ இதற்கு தீர்வல்ல. ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகுவதே ஒரே தீர்வு.மக்களின் தீர்ப்பின்படி புதிய ஜனாதிபதியும் பாராளுமன்றமும் தெரிவுசெய்யப்பட்ட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *