பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கோட்டாபயவின் பிரசார பாடலை எழுதிய பாடலாசிரியர்!

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பசன் லியனகே அனைத்து மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவு ஒன்றை இட்டு அவர் இவ்வாாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

“பாடல் ஒன்று காரணமாக சிரமங்களுக்கு உள்ளான அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். எனது பாடல்களை நீங்கள் கேட்டதன் காரணமாகவே நான் இந்த இடத்தில் இருக்கின்றேன்.

இதனால், தற்போது நான் உங்களுடன் இருக்கின்றேன். இனிமேலும் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முயற்சிக்கும் கட்சிகளுக்கு கடைக்கு போக வேண்டாம். நாட்டை கட்டியெழுப்ப புதியவர்களுக்கு இடங்கொடுங்கள்.

அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை தமக்கு சாதமாக நாட்டை பயன்படுத்தி சாப்பிட்டதன் காரணமாகவே நாட்டுக்கு தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இல்லை என்றால், இலங்கை எப்போதோ முன்னேற்றமடைந்த நாடாக மாறி இருக்கும்” என பசன் லியனகே தெரிவித்துள்ளார்.

பசன் லியனகே எழுதிய வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடல் ஜனாதிபதித் தேர்தலின் போது பிரபலமான பாடலாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *